உள்நாடு

ஹோமாகம வைத்தியசாலையில் ரொபோ உதவியுடன் சிகிச்சை

(UTV| கொழும்பு) –ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் கொரோனா தொற்று எனும் சந்தேகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள  இருவருக்கு ரொபோ உதவியுடன் சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளதாக ஹோமாகம ஆதார வைத்தியசாலையின்  பணிப்பாளர் மருத்துவர் ஜனித் ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

தனியார் நிறுவனமொன்றினால்  வழங்கப்பட்டுள்ள இந்த ரொபோ தினசரி பணிகளை திறம்பட செய்யும் வல்லமையுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இந்த ரொபோ, மருத்துவமனையின் அனைத்து  பகுதிகளுக்கும் பயணிக்கும் திறன் கொண்டது எனவும்  நோயாளியின் உடல்நிலை குறித்து மருத்துவர்களுக்கு எடுத்துரைக்கும் ஆற்றல்  கொண்டது எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது,

இதேவேளை இலங்கையில் உள்ள நிறுவனமொன்றினால்  வடிவமைக்கப்பட்ட  இந்த ரொபோ சுமார் 1 மில்லியன் ரூபா பெறுமதியானது என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

அஜித் நிவாட் கப்ரால் இராஜினாமா கடிதத்தினை கையளித்தார்

இரசாயன உர இறக்குமதிக்கான விசேட வர்த்தமானி

சுகாதார அதிகாரிகள் விடுத்துள்ள வேண்டுகோள்