உள்நாடு

ஹோட்டலில் மர்மமாக உயிரிழந்த இளைஞன்!

(UTV | கொழும்பு) –

ஹிக்கடுவ பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் அறையில் தங்கியிருந்த நபர் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளார்.
ஹிக்கடுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காலி வீதி, வெவல பிரதேசத்தில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த 27 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

ஹோட்டலின் அறையில் தங்கியிருந்தவரிடமிருந்து பதில் கிடைக்காமை குறித்து ஹோட்டல் நிர்வாகம் ஹிக்கடுவ பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து, பொலிஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பொலிஸாரும் ஹோட்டல் ஊழியர்களும் அந்த நபர் தங்கியிருந்த அறையின் ஜன்னலைத் திறந்து பார்த்த போது, ​​அந்த இளைஞன் குளியலறையில் இரத்தக் காயங்களுடன் இறந்து கிடப்பதை அவதானித்துள்ளனர்.

வறகொட, களனி பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.சடலம் நீதவான் விசாரணைக்காக சம்பவம் இடம்பெற்ற இடத்தில் பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஹிக்கடுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

எதிர்க்கட்சித் தலைவருக்கு வழங்கப்பட்ட ஆசனத்தில் அமர்ந்த அர்ச்சுனா – சிவில் செயற்பாட்டாளர்கள் சிஐடியில் முறைப்பாடு

editor

மீண்டும் கொழும்பு குப்பைகள் புத்தளத்தில் – இளைஞர்கள் ஆர்ப்பாட்டம்.

editor

சுமார் 44 தொழிற்சங்கங்கள் இன்று வேலை நிறுத்தத்தில்