கிசு கிசுவளைகுடா

ஹெலிகாப்டரில் இருந்து குதித்து சைக்கிள் சாகசம்

ஸ்காட்லாண்டை சேர்ந்த சைக்கிள் சாகச வீரர் கிரிஸ் கெய்லி. இவர் பல சாகசங்களை சைக்கிள் பயணம் மூலம் பல்வேறு நாடுகளில் நிகழ்த்தியுள்ளார். இவர் தற்போது புதிய சாகசம் ஒன்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

துபாயில் ஜுமைரா பகுதியில் மிகப்பெரிய கட்டுமான வசதி கொண்ட கண்கவர் மற்றும் உயரமான ஹோட்டல்களில் புர்ஜ் அல் அரேபியா ஹோட்டலும் ஒன்றாகும். சைக்கிள் சாகச வீரர் கிரிஸ் கெய்லி, ஹெலிகாப்டரில் இருந்து முதலில் 14 அடி உயரத்தில் இருந்து சைக்கிளோடு இந்த ஹோட்டலின் மேல்பகுதியில் குதித்தார்.

அதன் பின் ஹோட்டலின் மேல்பரப்பில் உள்ள சரிவான பலகை ஒன்றில் துவங்கி, பின் ஹோட்டலின் லிஃப்ட் வழியாக சைக்கிளில் வந்தபடி சுமார் 700 அடி உயரத்தை சுலபமாக கடந்தார்.

இந்நிலையில் வழியில் தென்படும் கட்டிடங்கள், மேல்தளங்கள்  என அனைத்தின் மீதும், தரையில் ஓட்டுவது போல் மிக சாதாரணமாக ஓட்டி சாகசம் புரிந்துள்ளார். இவ்வாறு எவ்வித அச்சமும் இல்லாமல்  சைக்கிளில் அவர் செய்த  சாகசங்கள்  பார்ப்போரை பிரமிப்படைய செய்துள்ளது. மேலும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பலராலும் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

 

 

 

 

 

Related posts

திங்களன்று மேல் மாகாணத்திற்கான ஊரடங்கு கட்டாயம் தளர்த்தப்படும்

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இந்தியப் பிரதமர் இலங்கைக்கு விஜயம்

பதில் ஜனாதிபதியாக ரணில்…