சூடான செய்திகள் 1

ஹெரோயின் மோசடி-பெண்ணொருவர் உடன் மூவர் கைது

(UTV|COLOMBO) கிராண்பாஸ் மற்றும் மாளிகாவத்தை பகுதிகளில் ஹெரோயின் மோசடியில் ஈடுபட்டு வந்த பெண்ணொருவர் உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

25 கிராம் 740 மில்லி கிராம் ஹெரோயினுடன் இரண்டு சந்தேக நபர்களை கிராண்பாஸ் பகுதியில் வைத்து ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

நேற்று இரவு கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளுக்கு அமைய இந்த மோசடியுடன் தொடர்புடைய பெண்ணொருவர் மாளிகாவத்தை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடமிருந்து 50 கிராம் 340 மில்லி கிராம் ஹெரோயின் மற்றும் 2 லட்சத்து 40 ஆயிரம் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளன.

 

 

 

 

 

 

 

 

Related posts

இலங்கையர் சென்னையில் மாயம்

08ம் திகதி ஐ.தே.கட்சியின் எதிர்ப்பு போராட்டம்

இன்றைய காலநிலை