சூடான செய்திகள் 1

ஹெரோயின் போதை பொருளுடன் 04 பேர் கைது

(UTV|COLOMBO) – 683 கிராம் ஹெரோயின் போதை பொருளுடன், போதை பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட நான்கு பேர் தெஹிவளை கவுடான பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் இனை தெரிவித்துள்ளார்.

பொலிஸ் விஷேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த நபர் நேற்று (16) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் சேவையாற்றும் நபர் ஒருவர் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் மிருகக்காட்சி சாலையில் உள்ள அலுமாரியில் இருந்து 400 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

குறித்த நபர்கள் மிருகக்காட்சி சாலையினுள் ஹெரோயின் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்துள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

பின்னர் குறித்த இருவரிடமும் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் கட்டுபெத்த பகுதியில் வைத்து அதிசொகுசு வாகனம் ஒன்று சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது குறித்த வாகனத்தில் பயணித்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது 68 கிராம் ஹெரோயின் மற்றும் 20 இலட்சம் ரூபாவிற்கு அதிகமான பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், 15 கிராம் ஹெரோயின், துப்பாக்கி ஒன்று, மெகசின் ஒன்று மற்றும் 9mm தோட்டாக்கள் 5 உம் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்படட நபர்களிடம் இருந்து மொத்தமாக 683 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Related posts

போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது

நாடாளுமன்றத்தை கூட்டி தீர்வு காணுமாறு வலியுறுத்தல்-பொதுநலவாய நாடுகள் அமைப்பு

ஜனாதிபதி மற்றும் பிரதமரின் சுதந்திர தின வாழ்த்துச் செய்தி