(UTV|கொழும்பு) – ஹெரோயின் கடத்தல் குற்றச்சாட்டில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று(13) மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
பொரளை பகுதியை சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையான 35 வயதான குற்றவாளி ஒருவருக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவினால் 2016 ஆம் ஆண்டு பொரளை பகுதியில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டிருந்தார்.