உள்நாடு

ஹெரோயினுடன் கொசல்வத்த ரைனா கைது

(UTV|கொழும்பு) – பாதாள உலகக்குழு உறுப்பினர் தினுக்கவின் உதவியாளரான கெசல்வத்த ரைனா கைது செய்யப்பட்டுள்ளார்.

பேலியகொடை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர் குழாமினால் களனியில் கைது இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது சந்தேக நபரிடம் இருந்து 5 கிராம் 100 மில்லிகிராம் ஹெரோயின், 3 தொலைபேசிகள், 19 சிம் அட்டைகள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பேலியகொட பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

ஊரடங்கு உத்தரவை மீறிய 1,169 பேர் கைது

யாழ்.மாவட்டத்திற்கான புதிய பிரதிப் பொலிஸ்மா அதிபர் பதவியேற்பு!

துஷான் குணவர்தனவுக்கு வெளிநாடு செல்ல தடை