சூடான செய்திகள் 1

ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட 9 ஈரான் நாட்டவர்களும் தடுப்பில்…

(UTV|COLOMBO) 120 கோடி ரூபாவிற்கும் அதிகப்பெறுமதிக் கொண்ட ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட 9 ஈரான் நாட்டவர்களையும் தடுப்பில் வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

தெற்கு கடற்பரப்பில் படகு ஒன்றில் குறித்தப் போதைப்பொருட்களை அவர்கள் கடத்தி வந்த நிலையில் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் இன்று கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, எதிர்வரும் 29ம் திகதி வரையில் அவர்களை தடுப்பில் வைத்து விசாரிப்பதற்கு காவற்துறை போதைப்பொருள் தடுப்பு பிரிவுக்கு நீதிமன்றம் அனுமதியளித்தது.

 

 

 

Related posts

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 460 ஆக உயர்வு

மின்னல் தாக்கி ஐவர் காயம்

அரச மற்றும் தனியார் துறையினருக்கு விசேட அறிவிப்பு