சூடான செய்திகள் 1

ஹெரோயினுடன் இருவர் கைது

(UTV|COLOMBO) கொள்ளுபிட்டிய பகுதியில் உள்ள வாகன தரிப்பிடம் ஒன்றில் இருந்து கைப்பற்றப்பட்ட பாரியளவான ஹெரோயினுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேக நபர்களிடம் இருந்து 2945 மில்லியன் ரூபா பெறுமதியான 294 கிலோ 490 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது இரு வேன்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பாணந்துறை மற்றும் வாழைத்தோட்டம் பகுதிகளை சேர்ந்த 32 மற்றும் 43 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் விற்பனை செய்யும் நோக்கத்தில் குறித்த ஹெரோயின் தொகை வைத்திருந்ததாக பொலிஸார் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

 

 

 

Related posts

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை

நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு [UPDATE]

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு இன்று கூடுகின்றது