வணிகம்

ஹுவாவி ஸ்மார்ட்போன்களுக்கு கவர்ச்சிகரமான கழிவுகளை வழங்கும் Ikman Deals

(UTV|COLOMBO) இலங்கையின் மிகப்பெரிய ஒன்லைன் சந்தையான ikman.lk, இலங்கையின் முன்னணி மொபைல் போன்ஸ் வழங்குனரான ஹுஹாவியுடன் அதன் ப்ரீமியர் பிளாக்சிப்  மாதிரியான P30 தொடரின் வெளியீட்டுக்காக கைகோர்த்துள்ளமை தொடர்பில் அறிவித்துள்ளது.

ikman.lk Deals தளத்தினூடாக இவை கிடைக்கப்பெறுவதுடன், ஒன்லைன் ஊடான கொள்வனவின் போது 35 இற்கும் அதிகமான ஹுவாவி  ஸ்மார்ட்போன் மாதிரிகளுக்கு  3 மாத காலப்பகுதி வரை செல்லுபடியாகும் கவர்ச்சிகரமான விலைக்கழிவுகளையும் பெற்றுக்கொள்ளமுடியும். இந்த டீல்களில் ஹுவாவி Y தொடர் மற்றும் Nova தொடர் மீதான கவர்ச்சிகர சலுகைகள் அடங்கலாக ஹுவாவியின் அண்மைய பிளாக்சிப் மாதிரியான P30 PROவும் உள்ளடங்குகின்றது. Ikman.lk Deals வீட்டு வாசலுக்கே விநியோகம் செய்வதன் மூலம்  இணையத்தளம் மற்றும் ikman.lk எப் மூலமான ஒன்லைன் கொள்வனவுகளுக்கான மேலதிக வசதியை உறுதிசெய்கின்றது.

இக் கைகோர்ப்பு தொடர்பில் கருத்து தெரிவித்த, ikman.lk இன் சந்தைப் பணிப்பாளர் சாபிர் டீன், ” இலங்கையின் மிகப்பெரிய ஒன்லைன் சந்தை என்ற வகையில், எமது வாடிக்கையாளர்களுக்கு பல நவீன ஸ்மார்ட்போன்களுக்கான சிறந்த டீல்களை வழங்கும் பொருட்டு ஹுவாவி டிவைஸ் ஸ்ரீ லங்காவுடன் கைகோர்த்துள்ளமை தொடர்பில் உற்சாகமடைகின்றோம்,” என்றார்.

” P30 வரிசையின் ப்ரீமியம் மொடலான, ஹுஹாவியின் P30 Pro  செயற்கை நுண்ணறிவின் ஊடாக படங்களின் தரத்தை அதிகரிக்கின்றது”, என ஹுவாவி டிவைஸ் ஸ்ரீ லங்காவின், நாட்டுக்கான தலைமை அதிகாரி பீட்டர் லியுயி குறிப்பிட்டார். Ikman.lk உடன் கைகோர்ப்பதன் மூலம் அதன் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் கவர்ச்சிகரமான விலையில் சாதனங்களை பெற்றுக்கொடுப்பது  தொடர்பில் மகிழ்ச்சியடைகின்றோம்,”

மேலதிகமாக, முன்னணி வங்கிப் பங்காளர்களிடமிருந்து 0% வட்டி இலவசம் மற்றும் மாதாந்த தவணைக் கட்டண திட்டம் உள்ளிட்ட சலுகைகள் கிடைக்கப்பெறுகின்றன. Ikman.lk  இன் பல்வேறு கட்டண தீர்வுகளான  UPay மற்றும் FriMi, கார்கில்ஸ் புட் சிட்டி சுப்பர்மார்க்கட் நிலையங்கள் மற்றும்  கார்கில்ஸ் வங்கிக் கிளைகள் ஊடான கட்டண வசதிகளும் கிடைக்கப்பெறுகின்றன.

 

 

 

 

 

Related posts

சிறிய – நடுத்தர அளவிலான தொழில்முனைவோரை முன்னேற்ற HNB 5 பில்லியன் ரூபா கடன் முறையை அறிமுகம் செய்கிறது

2020 ஜனவரியில் இலங்கையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள vivo S1 Pro

உரத்திற்கான புதிய விலை