சூடான செய்திகள் 1

ஹிருனிகா பிரேமசந்திரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு ஒத்திவைப்பு

(UTV|COLOMBO) பாராளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு ஏப்ரல் மாதம் 24ம் திகதி வரை கொழும்பு மேல் நிதிமன்றத்தால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறித்த இந்த வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சசி மகேந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திர இன்று பாராளுமன்ற அமர்வில் கலந்து கொண்டிருப்பதால் வேறு ஒரு தினம் வழங்குமாறு அவரது சட்டத்தரணி நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.

இளைஞர் ஒருவரை கடத்திச் சென்று சட்டவிரோதமான முறையில் தடுத்து வைத்திருத்தல் உள்ளிட்ட 17 குற்றச்சாட்டுக்களின் கீழ் சட்டமா அதிபரினால் குறித்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Related posts

இரண்டாம் கட்ட திருத்தப்பணிகள் நாளை முதல்

சுழிபுரம் சிறுமியின் கொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

மழையுடனான காலநிலை…