கேளிக்கை

ஹிருத்திக் ரோ‌ஷனுடன் யாரும் பணியாற்றக்கூடாது

(UTV|INDIA)-இந்தி பட உலகில் திறமையான நடிகை என்று பெயர் வாங்கியிருக்கும் கங்கனா ரணாவத், எதையும் ஒளிவு மறைவு இல்லாமல் வெளிப்படையாகவே சொல்லி விடுவார். கங்கணாவுக்கு இந்தியில் பெயர் வாங்கிக் கொடுத்த படங்களில் ஒன்று குயின். அந்த படத்தின் இயக்குநர் விகாஸ் பாஹல் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் கூறினார்.

படப்பிடிப்புக்கு செல்லும்போதெல்லாம் கட்டிப்பிடித்து முகத்தை கழுத்தில் அழுத்தி எனது கூந்தல் வாசனையை முகர்ந்து பார்ப்பார் என்றும், உனது வாசனை எனக்கு பிடிக்கிறது என்று கூறுவார் என்றும் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கங்கனா ரணாவத் கூறியதாவது,

‘‘எனக்கு இயக்குனர் விகாஸ் பாஹல் பாலியல் தொல்லை கொடுத்தார் என்று நான் கூறிய தகவல்கள் அனைத்தும் உண்மைதான். சினிமா துறையில் பெண்களிடம் நேர்மையாக நடந்து கொள்ளும் ஆண்கள் குறைவாகவே உள்ளனர். நடிகைகள் உள்ளிட்ட திரைத்துறையில் இருக்கும் பெண்கள் தொடர்ந்து பாலியல் தொல்லைகளை சந்திக்கிறார்கள். செக்ஸ் கொடுமையோடு பெண்களை தாக்கவும் செய்கின்றனர். இப்படிபட்ட ஆண்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

பேட்ட படத்தில் விஜய் சேதுபதியின் லுக்…

திஸ்ஸ நாகொடவிதான காலமானார்

உலகை விட்டும் பிரிந்தார் Chadwick-Boseman