உள்நாடுசூடான செய்திகள் 1

ஹிருணிகாவை பிணையில் விடுவிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு ஆட்சேபனை மனு தாக்கல்!

(UTV | கொழும்பு) –  மூன்று வருட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவை பிணையில் விடுவிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு ஆட்சேபனை மனு தாக்கல் செய்யவுள்ளதாக சட்டமா அதிபர் இன்று (04) கொழும்பு உயர் நீதிமன்றில் அறிவித்தார். இந்த பிணை கோரிக்கை இன்று கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா முன்னிலையில் பரிசீலிக்கப்பட்டது.

அங்கு, இந்த கோரிக்கை தொடர்பில் ஆட்சேபனைகளை சமர்ப்பிக்க சட்டமா அதிபர் எதிர்பார்ப்பதாக தெரிவித்த அரசாங்க சட்டத்தரணி, எழுத்து மூலம் ஆட்சேபனைகளை தாக்கல் செய்வதற்கு ஒத்திவைக்குமாறும் கோரினார்.

இதன்படி, சட்டமா அதிபருக்கு ஆட்சேபனைகளை சமர்ப்பிக்க அனுமதித்த உயர் நீதிமன்ற நீதிபதி, பிணை கோரிக்கையை எதிர்வரும் 11ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறும் உத்தரவிட்டார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

அஸ்வெசும விண்ணப்பதாரர்களுக்கான விசேட அறிவிப்பு

editor

கடந்த 4 நாட்களில் 140 மில்லியன் வருமானம்

இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் அறிவிப்பு