உலகம்

ஹாங்காங்கில் அவசர நிலை பிரகடனம்

(UTV|ஹாங்காங்) – சீனாவில் கொரோனோ வைரஸ் வேகமாக பரவிவரும் நிலையில் ஹாங்காங்கில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

ஒருவர் மூலம் மற்றொருவருக்கு பரவும் இந்த கொரோனோ வைரசுக்கு சீனாவில் இதுவரை 41 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த வைரசுக்கு 1287 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 237 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகவும் சீன அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. மனிதரிடமிருந்து மனிதருக்கு நேரடியாக பரவும் இந்த வைரஸ் தற்போது உலகின் பல்வேறு நாடுகளுக்கு பரவியுள்ளது.

இந்நிலையில், சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள தன்னாட்சி மாகாணமான ஹாங்காங்கில்லும் கொரோனோ வைரஸ் பரவலாம் என அச்சம் எழுந்துள்ளது. இதையடுத்து, ஹாங்காங்கில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

இந்த பிரகடனத்தை ஹாங்காங் தலைமை நிர்வாகி ஹேரி லேம் அறிவித்துள்ளார். அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதையடுத்து கொரோனோ வைரஸ் பரவுவதை தவிர்க்க தீவிர நடவடிக்கை எடுத்துவருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related posts

எல்லை கட்டுப்பாடுகளை தளர்த்தியது அவுஸ்ரேலியா

இந்தியாவில் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 987ஆக அதிகரிப்பு

கொரோனா தடுப்பூசியால் ஏற்பட்ட பக்க விளைவு