உள்நாடு

ஹர்த்தாலுக்கு ஆதரவாக தபால் சேவையும் நாளை வேலை நிறுத்தம்

(UTV | கொழும்பு) – நாளை (06) முதல் தீவிர ஹர்த்தால் பிரச்சாரத்திற்கு தங்கள் துறையின் அனைத்து ஊழியர்கள் மற்றும் நிர்வாகிகள் தொடர்ந்து ஆதரவளிப்பார்கள் என்று தபால் சேவை ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இன்று (05) நள்ளிரவு முதல் நாளை நள்ளிரவு வரை ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தொழிற்சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை சீர்செய்வதற்குப் பதிலாக அனைத்து அரசியல் கட்சிகளும் தமது அதிகாரத்தை காக்க அரசியல் சூழ்ச்சிகளை பயன்படுத்தி வருவதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

உதயங்க வீரதுங்கவுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

UPDATE = ஜனாதிபதியால் புதிய செயலாளர்கள் நியமனம்!

இலங்கை நிதியுதவி கோரவில்லை – IMF