விளையாட்டு

ஹர்திக் பாண்ட்யாவின் ஐ.பி.எல். சிறந்த பதினொருவர் அணி வெளியானது

(UTV | இந்தியா) – இந்தியன் பிரிமீயர் லீக் தொடரில் விளையாடிய வீரர்களை கொண்டு சிறந்த அணியை உருவாக்கிய ஹர்திக் பாண்ட்யா, மஹேந்திரசிங் டோனியை தலைவராக தெரிவு செய்துள்ளார்.

இந்தியாவின் பணம் கொழிக்கும் விளையாட்டான இந்தியன் பிரிமீயர் லீக் (IPL) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரை 12 சீசன் நடைபெற்று உள்ளது. இந்த ஆண்டுக்கான 13-வது ஐ.பி.எல். போட்டி கொரோனா வைரஸ் தொற்று காரணமாக காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதுவரை நடந்த ஐ.பி.எல். போட்டிகளை வைத்து இந்திய அணியின் சகலதுறை ஆட்டக்காரர் ஹர்திக் பாண்ட்யா சிறந்த பதினோருவர் கொண்ட அணியினை வெளியிட்டுள்ளார்.

இதில் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளரான லசித் மாலிங்க ஐ.பி.எல். போட்டிகளில் அதிக விக்கெட் கைப்பற்றிய வீரர் ஆவார். அவர் 172 போட்டிகளில் 170 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார். அந்த வகையில் ஹர்த்திக் இணைத்து அணியில் அவரும் உள்வாங்கப்பட்டுள்ளார்.

ஹர்திக் பாண்ட்யா தேர்வு செய்த ஐ.பி.எல். சிறந்த பதினொருவர் கொண்ட அணி:

கிறிஸ் கெய்ல், ரோஹித் சர்மா, விராட் கோஹ் லி, டி வில்லியர்ஸ், சுரேஷ் ரெய்னா, டோனி, (தலைவர், விக்கெட் காப்பாளர்) ஹர்திக் பாண்ட்யா, சுனில் நரீன், ரஷித் கான், பும்ரா, லசித் மலிங்கா.

Related posts

இரு முக்கிய பிடியெடுப்புக்களை தவறவிட்ட இலங்கை வீரர்களால் மாறிய போட்டி:கலங்கிய மாலிங்க

இலங்கைக் குழாம் அறிவிப்பு

2019 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான உத்தியோகபூர்வ பாடல் வெளியீடு…