சூடான செய்திகள் 1

ஹம்பந்தோட்டையில் யானைகள் சரணாலயம்…

(UTV|COLOMBO) ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் லுணுகம்வெஹர தேசிய வனாந்தரத்தில் யானைகள் சரணாலயத்தை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

சுமார் மூவாயிரம் ஹெக்டயர் நிலப்பரப்பில் சரணாலயம்  நிர்மாணிக்கப்படும். இதற்கு 84 கோடி ரூபா செலவழிக்கப்பட உள்ளதாக வன ஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் அறிவித்துள்ளது. தென்மாகாணத்திலும், ஊவா மாகாணத்திலும் குழப்பம் விளைவிக்கும் யானைகளைப் பிடித்து சரணாலயத்தில் விடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. சரணாயலத்தைச் சுற்றி 30 கிலோ மீற்றர் சுற்றளவிலான யானை வேலி அமைப்பதற்கும் எதிர்பார்க்கப்படுகிறது..

Related posts

கம்பெரலிய கிராம அபிவிருத்தி திட்டத்தை தொடர்ந்து நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம்

ஸ்ரீலங்கா பொது ஜன முன்னணியுடன் அரசியல் கட்சிகள் இணைவு

கொரோனா வைரஸ் – மேலும்  23 பேர் பூரண குணமடைந்தனர்