வகைப்படுத்தப்படாத

ஹட்டன், நுவரெலியா அனைத்து பாடசாலைகளுக்கும் பூட்டு!

(UTV | கொழும்பு) –

சீரற்ற காலநிலை காரணமாக ஹட்டன் மற்றும் நுவரெலிய கல்வி வலயங்களுக்குட்பட்ட அனைத்து அரச பாடசாலைகளும் நாளை (06) மற்றும் நாளை மறுநாள் மூடப்படவுள்ளன.

குறித்த வலயங்களின் கல்விப் பணிப்பாளர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர்.

ஹட்டன் மற்றும் நுவரெலியா கல்வி வலயங்களில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக குறித்த கல்வி வலயங்களுக்குட்பட்ட அனைத்து அரச பாடசாலைகளையும் மூடுவதற்கு இன்று (05) தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நுவரெலியா மாவட்டத்துக்கு நாளை (ஜூலை 06) முற்பகல் 11.00 மணி வரை அமுலுக்கு வரும் வகையில் மண்சரிவு அபாய எச்சரிக்கையை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இன்று விடுத்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இலங்கை மற்றும் பிலிப்பைன்ஸ் அகதிகளுக்கு அகதி அந்தஸ்து மறுப்பு – ஹொங்கொங் அரசாங்கத்துக்கு கண்டனம்!

Enterprise Sri Lanka Exhibition commences

Former DIG Dharmasiri released on bail