உள்நாடு

ஹட்டன் குடியிருப்பில் தீ விபத்து

(UTV|கொழும்பு)- ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எபோட்ஸிலி தோட்டத்தில் தொடர்வீடுகளைக்கொண்ட குடியிருப்பில் இன்றிரவு 7 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 14 வீடுகள் சேதமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் 5 வீடுகளுக்கு பகுதியளவு சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த ஹட்டன், டிக்கோயா நகரசபையின் தீயணைப்பு பிரிவினர், மக்களுடன் இணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இத்தீவிபத்து காரணமாக உயிர்சேதம் எதுவும் ஏற்படாதபோதிலும், பெருமளவில் பொருட் தேசங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படாத நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related posts

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாராளுமன்றிற்கு

வவுனியாவில் எலிக்காய்ச்சல் நோயினால் 41 பேர் பாதிப்பு

editor

கல்வி நிர்வாக சேவையாளர் தொழிற்சங்கம் அரசுக்கு எச்சரிக்கை