உள்நாடு

ஹட்டன் மறு அறிவித்தல் வரையில் முடக்கம்

(UTV | நுவரெலியா) – உடன் அமுலுக்கு வரும் வகையில் ஹட்டன் நகரம் தனிமைப்படுத்தல் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஹட்டனில் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதில் நால்வர் குடும்ப அங்கத்தவர்கள். ஏனைய அறுவரும் நெருங்கிய பழகியவர்கள் என ஹட்டன் சுகாதார பரிசோதகர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஹட்டன் நகரத்தில் கிருமி தொற்று தெளிக்கும் நடவடிக்கைகள் இன்று முன்னெடுக்கப்படுகிறதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

Related posts

எகிறும் ‘டெங்கு’

இளைஞர் விவகார அமைச்சின் அலுவலகம் இடமாற்றம்

சனத் நிஷாந்தவின் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பெப்ரவரி 2 ஆம் திகதி!