அரசியல்உள்நாடு

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பட்டியல் உறுப்பினர் பதவிக்கு முஹம்மத் சாலி நளீம் – வௌியான வர்த்தமானி

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் உறுப்பினர் பதவிக்கு முஹம்மது சாலி நளீமின் பெயரை உள்ளடக்கி வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணைக்குழுவினால் குறித்த வர்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டு 87,038 வாக்குகளைப் பெற்று 2 ஆசனங்களை வென்றது.

இதன்படி, குறித்த கட்சிக்கு தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி ஒன்று கிடைத்துள்ளதுடன், முஹம்மத் சாலி நளீம் குறித்த எம்.பி பதவிக்கு நியமிக்க கட்சி தீர்மானித்திருந்தது.

இவர் ஏறாவூர் நகரசபையின் முன்னாள் நகரசபை தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

கொழும்பில் முடக்கப்பட்டுள்ள இடங்களின் விபரம்

விபத்தில் படுகாயமடைந்த உபபொலிஸ் பரிசோதகர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

சீதுவை பகுதியில் துப்பாக்கி சூடு – ஒருவர் பலி