உள்நாடுசூடான செய்திகள் 1

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட கலந்துரையாடல் இன்று

(UTV|COLOMBO)- ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சகல தொகுதி அமைப்பாளர்களுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று (07) நடைபெறவுள்ளது

இந்த கலந்துரையாடல் கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதில் எதிர்வரும் பொதுத் தேர்தல் மற்றும் கட்சி மறுசீரமைப்பு செயற்பாடுகள் ஆகிய விடயங்கள் தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்படவுள்ளதாக அந்த கட்சியின் ஊடகப் பேச்சாளர் பாராளுமன்ற உறுப்பினர் வீரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts

சிக்கலில் அர்ச்சுனாவின் எம்.பி பதவி – அடுத்து என்ன நடக்கும்?

editor

மஹிந்தவுக்கு பங்களாதேஷ் பிரதமரால் வரவேற்பு [PHOTOS]

இரண்டாவது நாளாகவும் தொடரும் கனிய மணல் கூட்டுத்தாபன பணியாளர்களின் போராட்டம்…