கிசு கிசு

ஸ்ரீலங்கன் விமான சேவை இடைநிறுத்தம் : நியாயமற்ற நடவடிக்கை

(UTV | கொழும்பு) – சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள பயணிகள் பயணித்த விமானம் தொழில்நுட்ப காரணங்களுக்காக மாத்திரமே கொழும்பில் தரை இறக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டதாக சீன தூதரக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

23 பயணிகளுடன் கடந்த 7ஆம் திகதி டுபாயில் இருந்து ஷங்காயிற்கு பயணித்த ஸ்ரீ லங்கன் விமான சேவைக்குச் சொந்தமான விமானம் ஒன்று கொழும்பில் தரையிறக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, ஸ்ரீ லங்கன் விமான சேவைக்குச் சொந்தமான யூ.எல் – 866 எனும் விமானம் எரிபொருள் நிரப்புவதற்காக மாத்திரமே நிறுத்தப்பட்டதாகவும் இதில் பயணிகள் விமானத்திற்குள் உட்பிரவேசிக்கவோ வெளியேறவோ இல்லையென சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், குறித்த விமானம் ஷங்காய் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்ட போது அதில் பயணித்த பயணிகள் 23 பேருக்கும் பி.சி.ஆர். பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் அவர்கள் அனைவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சீன தூதரக அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இலங்கை உள்ளிட்ட மூன்று நாடுகளின் விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக சீனா நேற்றையதினம் (13) அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டர்களின் விலை அதிகரிக்கும் சாத்தியம்

புஷ்பா ராஜபக்ச இலங்கையை விட்டு வெளியேறினார்

ஜே.ஶ்ரீ ரங்கா மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் என்ன? [VIDEO]