வகைப்படுத்தப்படாத

ஸ்ரீ தர்மராஜ விகாரையில் புதிய அறநெறி பாடசாலைக் கட்டடம் ஜனாதிபதியினால் திறப்பு

(UTV|COLOMBO)-பொலன்னறுவை, கலஹகல ஸ்ரீதர்மராஜ விகாரையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள நீர் சுத்திகரிப்பு தொகுதி ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் மக்களிடம் கையளிக்கப்பட்டது.

‘கருணை ஆட்சி – நிலையான நாடு’ கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிட்டுள்ள அனைவருக்கும் ஆரோக்கியமான வாழ்வளித்து, நோயற்ற சமூகத்தைக் கட்டியெழுப்பும் நோக்குடன் சிறுநீரக நோய் நிவாரண தேசிய செயற்திட்டம் மற்றும் ஜப்பான் கூட்டமைப்பின் பிரதான நிறைவேற்றதிகாரி கலாநிதி மிட்சுகி சுகியின் அன்பளிப்பில் இந்த நீர் சுத்திகரிப்புத் தொகுதி நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

 

‘எழுச்சி பெறும் பொலன்னறுவை’ மாவட்ட அபிவிருத்தி செயற்திட்டத்தின் கீழ் கலஹகல ஸ்ரீ தர்மராஜ விகாரையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய அறநெறி பாடசாலைக் கட்டிடமும் இதன்போது ஜனாதிபதியினால் மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது.

 

விகாராதிபதி பொலன்னறுவை பிரதேச பிரதான சங்க நாயக்கர் குருவாஓயே தம்மசித்தி நாயக்க தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினரால் பிரித் பாராயணம் செய்யப்பட்டு ஜனாதிபதிக்கு இதன்போது ஆசிர்வாதம் வழங்கப்பட்டது.

 

இந்நிகழ்வில் வட மத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் பேசல ஜயரட்னவும் கலந்துகொண்டார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

200,000 packages at Mail Exchange due to strike

இஷா அம்பானியின் திருமணம்

16ம் திகதி வரை விளக்கமறியலில்-அர்ஜுன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன