உள்நாடு

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் செவ்வாய்க்கிழமை 24 ஆம் திகதி திறப்பு

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் கல்வி நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (24) மீண்டும் திறக்கப்படும் என உபவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் பத்மலால் எம்.மனேஜ் தெரிவித்துள்ளார்.

இதனால், அனைத்து மாணவர்களும் திங்கட்கிழமை (23) தங்களது விடுதிகளுக்கு வருமாறு பேராசிரியர் பத்மலால் எம்.மனேஜ் குறிப்பிட்டுள்ளார்.

இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலை அடுத்து கடந்த 12ஆம் திகதி மாலை 6.00 மணி முதல் பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடப்பட்டது.

இந்நிலையில், அனைத்து மாணவர்களும் பல்கலைக்கழக வளாகத்தை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது.

Related posts

டயனாவின் இடத்திற்கு முஜிபுர் ரஹ்மான்?

கொவிட் சடலங்களை இரணைதீவில் அடக்கம் செய்ய எதிர்ப்பு [VIDEO]

கடல் ஆமை இறைச்சியுடன் ஒருவர் கைது