சூடான செய்திகள் 1விளையாட்டு

ஷாகித் அப்ரிடியால் பெற முடியாத சாதனையை எலிஸ் பெர்ரி பெற்றார்

அவுஸ்திரேலியா வீராங்கனை எலிஸ் பெர்ரி இருபதுக்கு 20 கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுக்களுடன் 1000 ஓட்டங்களை கடந்த முதல் நபர் என்ற பெருமையை பெற்றார்.

இதற்கு முன்னர் பாகிஸ்தான் அதிரடி மன்னன் ஷாகித் அப்ரிடி 98 விக்கெட்டுக்களுடன் 1416 ஓட்டங்களை பெற்று இரண்டு விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் சாதனையை தவறவிட்டார். அந்த சாதனையை எலிஸ் பெர்ரி படைத்துள்ளார்.

இந்த சாதனையை இங்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் 47 ஓட்டங்களை பெற்றதன் மூலம் குறித்த சாதனையை படைத்துள்ளார்.

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் ஷாகிப் அல் ஹசன் 1471 ஓட்டங்களுடன் 88 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார். இவரால் எலிஸ் பெர்ரியின் சாதனையை முறியடிக்க வாய்ப்புள்ளது.

Related posts

சவுதியில் கொலையுண்ட தமிழ்பெண் தொடர்பில் விசாரணைகள்

தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானம்

நவீன கையடக்க தொலைபேசி, உபகரணங்களுடன் மூவர் கைது