விளையாட்டு

ஷந்திமாலுக்கு ஓய்வு

(UDHAYAM, CAPE TOWN) – சுற்றுலா இலங்கை அணிக்கும் தென்னாபிரிக்க அணிக்கும் இடையிலான நான்காவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

கேப் டவுனில் இந்த போட்டி இடம்பெறவுள்ளது.

இந்த போட்டியில் இலங்கை அணி வீரர் தினேஸ் ஷந்திமாலுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு பதிலாக சந்துன் வீரகொடி அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐந்து போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இதுவரையில் இடம்பெற்றுள்ள மூன்று போட்டிகளிலும் தொன்னாபிரிக்க அணி வெற்றிப்பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.

இந்த நிலையில் இலங்கை அணியுடனான இந்த தொடரை ஐந்துக்கு பூச்சியம் என்ற வகையில் முற்றாக கைப்பற்றுவோம் என தென்னாபிரிக்க அணித் தலைவர் ஏ.பி டிவில்லியர்ஸ் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Related posts

சுதந்திர கிண்ண தொடரில் அசேல குணரத்னவும் இல்லை

46-வது வயதிற்குள் அடியெடுத்தும் வைக்கும் சச்சின்

தினேஸ் சந்திமால் நேபாளத்திற்கு