கேளிக்கை

ஷகிலா படத்தின் பர்ஸ்ட் லுக் இதோ…

(UTV|INDIA)-தென்னிந்தியத் திரையுலகில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்த ‌ஷகிலாவின் வாழ்க்கை வரலாற்றை இந்திரஜித் லங்கேஷ் திரைப்படமாக இயக்கி வருகிறார்.

திரைப்படங்களிலும் தனிப்பட்ட வாழ்விலும் ‌ஷகிலாவின் ஆளுமை குறித்து அறிந்துள்ள அவர் பலரும் அறிந்திராத சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு படத்தை இயக்கிவருகிறார். ‌ஷகிலா வேடத்தில் ரிச்சா நடிக்கிறார்.

‌ஷகிலா இந்தப் பட உருவாக்கத்திலும் பங்காற்றுகிறார். படப்பிடிப்பு தளத்தில் தன்னைப் பற்றியும் தனது வீட்டை, சுற்றியுள்ள இடங்கள் குறித்தும் கலை இயக்குநர் குழுவுக்குக் கூறி தத்ரூபமாக படம் வெளிவரப் பணியாற்றி வருகிறார். ரிச்சாவும் ‌ஷகிலாவுடன் நெருங்கிப் பழகி அவரது உடல்மொழி, பேசும் விதம் உள்ளிட்ட நுட்பமான வி‌ஷயங்களைக் கவனித்து தனது நடிப்பில் வெளிப்படுத்துகிறார்.

சிறப்புத் தோற்றத்தில் ‌ஷகிலாவும் சில காட்சிகளில் வர உள்ளதாக படக்குழு தெரிவித்தது. இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

 

 

Related posts

பிகில் பட பாடல்; அட்லீ திடீர் அறிவிப்பு

(VIDEO)-ஏ.ஆர்.ரஹ்மானின் ‘மார்வெல் Anthem வெளியானது…

ஆன்மீக வழியில் சமந்தா