அரசியல்உள்நாடு

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியீடு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்க்ஷவின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று (02) வெளியிடப்படுகிறது.

இந்நிகழ்வு இன்று காலை 10.00 மணிக்கு கொழும்பு ஐ.டி.சி ரத்னதீப ஹோட்டலில் பொதுமக்களுக்கு வழங்கப்படவுள்ளது.

“கொள்கை இலக்குகள் மற்றும் புதுமைத் திட்டம்” என அறிமுகப்படுத்தப்பட்ட இந்தக் கொள்கைத் திட்டம் 2025-2035க்கான பத்தாண்டுத் திட்டத்தைக் கொண்டுள்ளது.

விஞ்ஞாபனத்தின் அசல் வடிவம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவிடம் கடந்த 30ஆம் திகதி சுப முகூர்த்தத்தில் கையளிக்கப்பட்டது.

Related posts

அரச அச்சு நடவடிக்கைகள் அனைத்தும் அச்சக திணைக்களத்தில்

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு புதிய பணிப்பாளர் நியமனம்

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு குறித்து வௌியான அறிவிப்பு!