சூடான செய்திகள் 1

ஶ்ரீலங்கன் விமான சேவையின் போக்குவரத்து தாமதம் குறித்து அறிக்கை

(UTV|COLOMBO)-ஸ்ரீலங்கன் விமான சேவையின் விமான போக்குவரத்தில் தாமதம் ஏற்பட்டமை தொடர்பில் அறிக்கையொன்றை கோரியுள்ளதாக அரச தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

ஸ்ரீ லங்கன் விமான சேவையினால் இன்று முற்பகல் குறித்த அறிக்கை வழங்கப்படும் என அமைச்சின் செயலாளர் ரவீந்திர ஹேவா விதாரண தெரிவித்துள்ளார்.

இரண்டு விமானங்களில் ஏற்பட்ட தொழிநுட்ப கோளாறு காரணமாக ஸ்ரீலங்கன் விமான சேவையின் போக்குவரத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கன் விமான சேவை அறிவித்துள்ளது.

இதனால் பயணிகள், விமான நிலையத்திற்கு வருகை தருவதற்கு முன்னர், பயண விபரங்கள் குறித்து ஒன்லைன் ஊடாக அறிந்து கொள்ளுமாறு நிறுவனத்தின் ஊடக பணிப்பாளர் தீபால் பெரேரா தெரிவித்தார்.

அல்லது 24 மணி நேர தொலைபேசி சேவையூடாகவும் தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

019 7331979 எனும் தொலைபேசி இலக்கத்திற்கு பயணிகள் அழைப்பினை ஏற்படுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விமான சேவையை வழமைக்கு கொண்டு வருவதற்காக ஸ்ரீலங்கன் விமான சேவை ஊழியர்கள் 24 மணி நேர சேவையை மேற்ண்டுள்ளதாக ஸ்ரீலங்கன் விமானச்சேவை குறிப்பிட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

“2020 இல் சஜித் வருகிறார்” மக்கள் பொதுக் கூட்டம்…

மேலும் 21 பேர் பூரண குணமடைந்தனர்

சிறிய மற்றும் நடுத்தர முயற்சியாளர்களுக்கு 05 வருட வரி விலக்கு – நிதி அமைச்சர்