உள்நாடு

வௌிநாட்டில் உள்ள இலங்கையர்களுக்கு அரசாங்கம் விடுத்துள்ள கோரிக்கை

(UTV|கொழும்பு) – நாடு திரும்புவதை எதிர்ப்பார்த்துள்ள வெளிநாடுகளில் உள்ள இலங்கையரகள், கொரோனா வைரஸை நாட்டினுள் கட்டுப்படுத்தும் வரை தாம் வசிக்கும் இடங்களிலேயே பாதுகாப்பாக இருக்குமாறு இலங்கையர்களிடம் அரசாங்கம் கோரியுள்ளது.

கொரோனா வைரஸை தடுப்பதற்கு அரசினால் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டினுள் வைரஸ் பரவலை பரவாமல் தடுக்கும் நடவடிக்கையாக வௌிநாட்டவர்கள் வருகை முற்றாக தடை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வௌிநாடுகளில் இருக்கும் மாணவர்கள், வர்த்தகர்கள் மற்றும் தொழிலுக்காக சென்றுள்ளவர்கள் தாயகம் திரும்பவதற்கு மேற்கொண்டுள்ள கோரிக்கை தொடர்பில் நாட்டில் வைரஸ் கட்டுப்படுத்தப்பட்ட பின்னர் பரிசீலிக்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

Related posts

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் பிரதமருக்கு அமோக வரவேற்பு

இலங்கையில் சுற்றித்திரியும் – பிரித்தானிய முன்னாள் பிரதமர் டேவிட் கெமரூன்!

ஊரடங்கு சட்டத்தை மீறிய 101 பேர் கைது