சூடான செய்திகள் 1

வௌிநாடுகளில் குடியுரிமை பெற்றுள்ள 32,000 இலங்கையர்க்கு இரட்டைப் பிரஜாவுரிமை

(UTV|COLOMBO)-வௌிநாடுகளில் குடியுரிமை பெற்றுள்ள இலங்கையர்கள் 32,000 பேருக்கு கடந்த 3 வருட காலப் பகுதியில் அரசாங்கம் இரட்டைப் பிரஜாவுரிமை வழங்கியுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகழ்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இரட்டைப் பிரஜாவுரிமை கோரி ஒரு மாதத்தில் 700 விண்ணப்பதாரிகள் விண்ணப்பிப்பதாக குடிவரவு மற்றும் குடியகழ்வுத் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய, 2017 ஆம் ஆண்டில் 12,000 பேருக்கு இரட்டைப் பிரஜாவுரிமை வழங்கப்பட்டுள்ளது.

இரட்டைப் பிரஜாவுரிமை கோரி வருகின்ற விண்ணப்பங்கள் விசேட குழுவினூடாக பரிசோதனைக்குட்படுத்தப்பட்டதன் பின்னர் இரட்டைப் பிரஜாவுரிமை வழங்கப்படவுள்ளதாக குடியகழ்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

இன்று முதல் கடுமையாகவுள்ள வீதி ஒழுங்கை சட்டம்

4,130 பட்டதாரிகளுக்கான நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வு இன்று

பாடசாலைகளுக்கு அருகில் வாகனங்களை நிறுத்தி வைக்க வேண்டாம்