உள்நாடு

வைத்தியசாலையில் மரணித்த சிசு மாயம்! மாத்தறையில் சம்பவம்

மாத்தறை புதிய மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்த சிசுவின் சடலம் என வைத்தியசாலை ஊழியர்கள் தமக்கு காட்டிய சடலம் தங்களுடைய குழந்தையின் சடலம் அல்ல என பெற்றோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

அதன்படி, சிசுவின் சடலம் குறித்த சந்தேகத்தின் அடிப்படையில் DNA பரிசோதனை நடத்த வேண்டும் என பெற்றோர் வைத்தியசாலை அதிகாரிகளிடம் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர்.

பின்னர், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இதற்கு அனுமதி வழங்கிய போதிலும், வைத்தியசாலையின் பணிப்பாளர் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

மாத்தறை வெலிகம பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய காவிந்த்யா மதுஷானி தனது முதல் குழந்தையைப் பெற்றெடுப்பதற்காக கடந்த 22 ஆம் திகதி மாத்தறை புதிய மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

மதுஷானி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் குழந்தையைப் பெற்றெடுத்தார், ஆனால் குழந்தை இறந்துவிட்டதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.

சிசுவின் சடலத்தை தந்தையிடம் காட்டாமல் புதைத்தமை தொடர்பில் வைத்தியசாலை ஊழியர்களிடம் உறவினர்கள் வினவிய போது, சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவித்தனர்.

இது தொடர்பில் வைத்தியசாலை ஊழியர்கள் முன்னுக்குப் பின் முரணாக தகவல்களை தெரிவித்துள்ளமை தொடர்பில் உறவினர்களுக்கு பலத்த சந்தேகம் ஏற்பட்டுள்ளது.  இந்நிலையில் நேற்று (27) பிற்பகல் பிரேத அறையில் இருந்து கண்டெடுக்கப்பட்ட சிசு ஒன்றின் சடலத்தை வைத்தியசாலை ஊழியர்கள் பெற்றோரிடம் காண்பித்த போதிலும் அது தமது பிள்ளையல்ல என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இறந்த சிசுவின் தந்தை சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்,

“நான் இன்னும் என் குழந்தையின் முகத்தை கூட பார்க்கவில்லை. இவர்கள் எங்களை அங்கும் இங்கும் அனுப்புகிறார்கள். ப்ளீஸ்… எங்களுக்கு நியாயம் கொடுங்கள்.” என்றார்.

தெரன

Related posts

நீதவான் சுனில் அபேசிங்விற்கு 16 ஆண்டுகள் சிறைத்தண்டனை

பிரதான அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கு அழைப்பு

ரவிக்கு எதிரான வழக்கு : ஏப்ரல் 27இல் சாட்சிய விசாரணை ஆரம்பம்