விளையாட்டு

வேல்ஸ் அணி அரையிறுதிக்கு தகுதி

(UTV|COLOMBO) – 2019 றக்பி உலகக்கிண்ண தொடரின் இன்று(19) இடம்பெற்ற மூன்றாவது காலிறுதி போட்டியில் வேல்ஸ் அணி வெற்றிப் பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

பிரான்ஸ் மற்றும் வேல்ஸ் அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற குறித்த இந்தப் போட்டியில் 20 – 19 என்ற கணக்கில் வேல்ஸ் அணி வெற்றிப் பெற்று அரையிறுதிக்கு தகுதிப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இதற்கு முன்னர் இடம்பெற்ற இரண்டு காலிறுதி போட்டிகளிலும் இங்கிலாந்து மற்றும் நியூஸிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ரஷிய உலக கோப்பை கால்பந்து சுவாரஸ்யமான தகவல்கள் இதோ…

பொருளாதார நெருக்கடிக்கு உதவ இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தீர்மானம்

டெஸ்ட் அணிகளின் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டது ஐ.சி.சி.