உள்நாடுசூடான செய்திகள் 1

வேட்புமனுக்களைப் பொறுப்பேற்கும் காலம் இன்றுடன் நிறைவு

(UTV|கொழும்பு)- எதிர்வரும் பொதுத்தேர்தலுக்கான வேட்புமனுக்களைப் பொறுப்பேற்கும் காலம் இன்று(19) மதியம் 12 மணியுடன் நிறைவடைய உள்ளது.

இன்று(19) காலை 8.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை இந்த பணிகள் இடம்பெறும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

இதேநேரம், இன்று மதியம் 12 மணி முதல் 1.30 வரையிலான காலப்பகுதியில் வேட்புமனு தொடர்லான ஆட்சேபனைகளை தெரிவிக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, பொதுத் தேர்தலுக்காக 357 சுயேட்சைக் குழுக்கள் இதுவரை கட்டுப்பணம் செலுத்தியுள்ளன.

பொதுத் தேர்தலை முன்னிட்டு 126 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளன.

Related posts

இன்று முதல் Park & Ride பஸ் சேவை

எதிர்க்கட்சி தலைவராக சஜித் பிரேமதாஸ

அடுத்தவர்களுக்கு வழிவிடும் தலைமைத்துவப் பண்பு எமது அரசியல் தலைவர்களிடம் இல்லை – ஐங்கரநேசன் ஆதங்கம்