உள்நாடு

வேட்பாளர்கள் தேர்தலுக்கு முன்பாக தங்களது சொத்து விபரங்களை வெளியிட வேண்டும்

(UTV |கொழும்பு) – எதிர்வரும் பொதுத்தேர்தலில் கட்சி ரீதியாகவும் சுயேட்சை ரீதியாகவும் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தலுக்கு முன்பாக தங்களது சொத்து விபரங்களை வெளியிட வேண்டும் என பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களுக்கிடையில் தேர்தல்கள் செயலகத்தில் நேற்று(17) சந்திப்பொன்று இடம்பெற்றது.

குறித்த சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி இதனை குறிப்பிட்டார்.

எதிர்வரும் பொதுத்தேர்தலில் கட்சி ரீதியாகவும் சுயேட்சை ரீதியாகவும் 7,452 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக பெப்ரல் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

Related posts

இன்று முதல் கடுமையாக அமுலாகும் பயணக்கட்டுப்பாடு

ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டது

அசாத் மௌலானா வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்கள்!