உள்நாடு

வேகமாகப் பரவிவரும் வைரஸ் தொற்று – சுகாதாரத் துறையினர் விடுத்துள்ள விசேட அறிவிப்பு

(UTV | கொழும்பு) –

நாட்டில் தற்போது வேகமாக பரவிவரும் வைரஸ் தொற்றுக்களுக்கு, வைத்திய ஆலோசனையின்றி நுண்ணுயிர் எதிர்ப்பிகளை பயன்படுத்த வேண்டாம் என சுகாதாரத்துறையினர் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலைக் காரணமாக பல பிரதேசங்களில் தற்போது இன்புளுவன்சா உள்ளிட்ட வைரஸ் தொற்றுக்கள் வேகமாக பரவி வருகின்றன.

இந்த நிலையில், வைத்திய ஆலோசனையின்றி நுண்ணுயிர் எதிர்ப்பிகளை பயன்படுத்த வேண்டாம் என சுகாதாரத் துறையினர் பொது மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளனர். இந்த விடயம் தொடர்பாக கருத்து வெளியிட்ட கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் நந்தன திக்மதுகொட, நீண்ட நாட்களாக காய்ச்சல் நிலவுமாயின் உடனடியாக அரச வைத்தியசாலைக்கு சென்று வைத்திய ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளுமாறு அறிவித்துள்ளார்.

அவ்வாறான வைரஸ் தொற்றுகள் காற்றின் மூலம் வேகமாகப் பரவுவதால், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் நாட்பட்ட நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும், நோயிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக முகக்கவசத்தை அணியுமாறும் விசேட வைத்திய நிபுணர் நந்தன திக்மதுகொட தெரிவித்துள்ளார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

உயர்தரப் பரீட்சை வெட்டுப்புள்ளி இன்று வெளியீடு

பொய் கூறியுள்ளேன்- ஒப்புக்கொண்ட ஹிஜாஸுக்கு எதிரான சாட்சியாளர்

சாய்ந்தமருது மத்ரசா மாணவன் கொலை, மௌலவிக்கு மீண்டும் 14 நாட்கள் சிறை..!