உலகம்

வெள்ளை மாளிகையில் அதிகரிக்கும் கொரோனா

(UTV |  அமெரிக்கா) – கொவிட் 19 (கொரோனா) நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டமையானது வல்லரசுகளுக்கு கேள்விக்குறியாக உள்ளது எனலாம்.

ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், அவரது மனைவி மெலானியாவுக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், வெள்ளை மாளிகையுடன் தொடா்புடைய மேலும் பலருக்கு அந்த நோய்த்தொற்று தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

வெள்ளை மாளிகைக்கு அடிக்கடி வந்து செல்லும் குடியரசுக் கட்சி செனட் உறுப்பினா் தாமஸ் டில்லிஸுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்றொரு செனட் உறுப்பினரான மைக்கேல லீ-க்கும் அந்த நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது.

இத்துடன், வெள்ளை மாளிகை ஆலோசகராக இருந்த கெல்யேன் கோன்வேயும் தனக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளாா். டிரம்ப்பின் பிரசார மேலாளராகப் பொறுப்பு வகிக்கும் பில் ஸ்டெஃபியனுக்கும் அந்த நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது.

இதுதவிர, 3 வெள்ளை மாளிகை செய்தியாளா்கள், ஏராளமான வெள்ளை மாளிகை ஊழியா்களுக்கும் கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது சோதனையில் உறுதியாகியுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் மாலியில் பாராளுமன்ற தேர்தல்

பிரித்தானியாவை விட்டு வெளியேறுவோருக்கு அபராதம்

பல்பொருள் அங்காடியில் தீ – 3500 பேர் வெளியேற்றம்