உலகம்

வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச்சூடு

(UTV|அமேரிக்கா) – வெள்ளை மாளிகைக்கு அருகே துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டதையடுத்து செய்தியாளர்கள் சந்திப்பில் இருந்து அமேரிக்க அதிபர் டிரம்ப் உடனடியாக அங்கிருந்து வெளியேறியுள்ளார்

வெள்ளை மாளிகை பகுதி அருகே ஆயுதங்களுடன் மர்ம நபர் ஒருவர் சுற்றித் திரிந்துள்ளதை உடனே சுதாரித்துக் கொண்ட இரகசிய சேவை பாதுகாப்பு படையினர் அந்த நபர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மர்ம நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கிடையே, வெள்ளை மாளிகையில் தனது வழக்கமான செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட டிரம்ப், துப்பாக்கிச்சூடு நடைபெற்றதும் பாதியில் இருந்து வெளியேறினார்.

Related posts

மெக்ஸிக்கோ – கனேடிய ஒப்பந்தத்தில் கைச்சாத்து

இந்தோனேஷியாவில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம்

மூன்றாவது தடுப்பூசிக்கு அனுமதி