உள்நாடு

வெள்ளியன்று மொடர்னா தடுப்பூசி டோஸ்கள்

(UTV | கொழும்பு) – இலங்கைக்கு எதிர்வரும் 16ம் திகதி மேலும் 1.5 மில்லியன் மொடர்னா தடுப்பூசி டோஸ்கள் கிடைக்கப் பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொவெக்ஸ் திட்டத்தின் கீழ் குறித்த தடுப்பூசி டோஸ்கள் இலங்கைக்கு கிடைக்கப் பெற உள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.

கொவெக்ஸ் திட்டத்தின் கீழ் அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படும் மொடர்னா தடுப்பூசிகளின் ஒரு மில்லியன் டோஸ்களை இலங்கைக்கு பெற்றுக் கொடுக்க கடந்த தினம் உலக சுகாதார அமைப்பு அனுமதி வழங்கி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பெட்ரோல் கப்பல் இந்த வாரம் இலங்கைக்கு

கண்டியில் சிறியளவிலான நிலஅதிர்வு

இன்று முதல் அமுலாகும் நாடாளாவிய ரீதியிலான பயணக்கட்டுப்பாடு