வகைப்படுத்தப்படாத

வெள்ளவத்தையில் கட்டிடமொன்று இடிந்து விழுந்துள்ளது

(UDHAYAM, COLOMBO) – வெள்ளவத்தை சவோய் திரையரங்குக்கு அருகில் கட்டிடமொன்று இடிந்து வீழ்ந்துள்ளது.

இந்நிலையில், 8 பேர் களுபோவில மருத்துவமனையில் இதுவரையில்  அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 4 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கட்டுமாணப் பணிகள் நடந்துகொண்டிருந்த நிலையிலேயே கட்டிடம் இடிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அங்கு மீட்புப் பணிகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுவதுடன், மேலும் பலர் இதில் சிக்கியிருக்க கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலதிக தகவல்கள் விரைவில்..

Related posts

கடலில் மூழ்கிய இலங்கையரை மீட்ட தமிழக மீனவர்கள்

பெண்ணைக் கொடூரமாகத் தாக்கிய கட்சித்தலைவர்…

Jeremy Renner starrer ‘Hawkeye’ series to introduce Kate Bishop