சூடான செய்திகள் 1

வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பயிர் நிலங்களுக்கான மதிப்பீட்டு பணிகள் இன்றிலிருந்து ஆரம்பம்

(UTV|COLOMBO)-வட மாகாணத்தின் சில மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக, பயிர் நிலங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பில் மதிப்பீடு செய்யும் பணிகள் இன்று (07) ஆரம்பமாகவுள்ளது.

இந்த பணிகளில் விவசாய அமைச்சின் அதிகாரிகள் மற்றும் காப்புறுதி அதிகாரிகளும் ஈடுபடவர் என்று விவசாய திணைக்கள பணிப்பாளர் நாயகம் கலாநிதி வீரக்கோன் தெரிவித்தார்.

உர நிவாரண திட்டத்தின் கீழ், பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஏற்கனவே காப்புறுதி திட்டத்தில் இணைந்து கொண்டமையினால் அதனூடாக நட்டஈட்டு கொடுப்பனவுகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வீரகோன் தெரிவித்தார்.

இதன் அடிப்படையில் ஒரு ஹெக்டெயர் பயிர் நிலத்திற்கு 40 ஆயிரம் ரூபா நட்டஈடு வழங்கப்படும்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

 

 

 

 

Related posts

நியோமால் ரங்கஜீவ மீண்டும் சேவையில் இணைப்பு

நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விசேட வர்த்தமானி அறிவிப்பு

மனைவியுடன் வீட்டுத்தோட்டத்தில் இருந்த கல்லக்காதலர் மண்வெட்டியால் தாக்கி பலி