உள்நாடு

வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடி – சந்தேக நபர் கைது.

(UTV | கொழும்பு) –

துபாய் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடி செய்ததாக கூறப்படும் பெண் ஒருவர் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட புலனாய்வு பிரிவினரால் நேற்று (2) கைது செய்யப்பட்டுள்ளார்.

தெமட்டகொடை பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவர் துபாய் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாக தெமட்டகொடை பகுதியில் உள்ள மூன்று நபர்களிடமிருந்து 8 இலட்சம் ரூபா மோசடி செய்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட புலனாய்வு பிரிவினருக்கு மூன்று முறைப்பாடுகள் கிடைத்துள்ளது.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர் தெமட்டகொடை பகுதியில் வைத்து நேற்று (2) கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நேற்று (2) இரவு தலங்கமை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று (3) மாளிகாகந்தை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

 சுதந்திர தினத்தில் சிசுவுக்கு நடந்த சோகம்

புகையிரதக் கட்டணமும் அதிகரிக்கப்படலாம்

இன்றும் நாளையும் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு உத்தரவு அமுலில்