உள்நாடு

வெளிநாட்டு கடவுச்சீட்டு விநியோகம் இன்று முதல் வழமைக்கு

(UTV | கொழும்பு) – தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள வெளிநாட்டு கடவுச்சீட்டு விநியோகம் இன்று முதல் வழமைக்கு திரும்பும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தின் கணனி அமைப்பில் ஏற்பட்ட பிழை நேற்று (08) பிற்பகல் வரை சரி செய்யப்பட்டதாக பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

இதன்படி, பத்தரமுல்ல தலைமை அலுவலகம் மற்றும் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் அனைத்து பிராந்திய அலுவலகங்களிலும் வெளிநாட்டு கடவுச்சீட்டு வழங்கும் நடவடிக்கைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

Related posts

இரு தினங்கள் அரச விடுமுறை நாட்களாக அறிவிப்பு

திருத்தப்பணிகள் காரணமாக 24 மணிநேர நீர் வெட்டு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம்- பொலிஸ் பரிசோதகர் தொடர்பான வழக்கு விசாரணை மறுவிசாரணைக்காக ஒத்திவைப்பு