உள்நாடு

வெளிநாடுகளில் உள்ள இலங்கை மாணவர்ளை அழைத்து வர நடவடிக்கை

(UTV|கொழும்பு) –வௌிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கை மாணவர்களை மீள அழைத்து வருவதற்கான விசேட வேலைத்திட்டம் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.

அதற்கமைய, முதல் கட்டமாக பாகிஸ்தானில் சிக்கியுள்ள 115 மாணவர்களை விசேட விமானத்தினூடாக இன்று நாட்டிற்கு அழைத்து வரவுள்ளதாக விமான நிலையங்கள் மற்றும் விமான சேவை நிறுவனத்தின் நடவடிக்கை பிரிவு பணிப்பாளர் ஷெஹான் சுமனசேகர குறிப்பிட்டார்.

இந்தியாவில் உள்ள இலங்கை மாணவர்கள் 102 பேரும் நாட்டிற்கு அழைத்துவரப்படவுள்ளனர்.

குறித்த மாணவர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டதன் பின்னர் அவர்களை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களைத் தவிர ஏனைய நாடுகளிலும் சிக்கியுள்ள இலங்கை மாணவர்களை மீள அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Related posts

பாடசாலைகளின் விடுமுறை தொடர்பில் கல்வியமைச்சின் அறிவிப்பு!

இலங்கையில் சில இணையதளங்கள் முடக்கம்

அனுரவின் உடல்நலம் பாதிப்பு – ஓய்வெடுக்குமாறு மருத்துவர்கள் வேண்டுகோள்

editor