சூடான செய்திகள் 1

வெலிக்கடை சிறைச்சாலை – 150 கைதிகள் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றம்

(UTV|COLOMBO) வெலிக்கடை சிறைச்சாலையில், மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதிகள் தடுத்துவைக்கப்பட்டுள்ள பகுதியில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தப்பணிகள் காரணமாக வெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள 150 கைதிகள் பூசா மற்றும் அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் பணிப்பாளர் நாயகம் J.W. தென்னகோன் தெரிவித்துள்ளார்.

அவர்களில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள 69 கைதிகளும் அடங்குவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ள 150 கைதிகளும் அடுத்த மாதத்தில் மீண்டும் வெலிக்கடை சிறைச்சாலைக்கு அழைத்துவரப்படுவர் எனவும் பூசா மற்றும் அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைகளின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் பணிப்பாளர் நாயகம் J.W. தென்னகோன் கூறியுள்ளார்.

 

 

 

Related posts

கோட்டாவுக்கு எதிரான இலங்கை பிரஜை தொடர்பிலான மனு விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு

3 பதில் அமைச்சர்கள் பதவிப்பிரமாணம்

தீர்மானம் இன்றி முடிவடைந்த சுதந்திர கட்சியின் விசேட கூட்டம்…