விளையாட்டு

வெற்றியாளர் கிண்ணத் தொடரில் மார்க்ஸ் ஸ்டோனிஸ்

(UDHAYAM, COLOMBO) – அவுஸ்திரேலிய அணியின் வீரரான மார்க்ஸ் ஸ்டோனிஸ், (Marcus Stoinis) வெற்றியாளர் கிண்ணத் தொடரில் பங்கேற்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரில் கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த அவர், தோள்பட்டையில் உபாதை காரணமாக சிகிச்சைக்காக நாடு திரும்பினார்.

இதன் காரணமாக இங்கிலாந்தில் எதிர்வரும் ஜுன் மாதம் முதலாம் திகதி ஆரம்பமாகவுள்ள வெற்றியாளர் கிண்ண தொடரில் பங்கேற்பதில் நம்பிக்கையற்ற நிலைமை ஏற்பட்டிருந்தது.

எனினும் தோள்பட்டை உபாதையிலிருந்து தற்போது குணமடைந்து உடல் தகுதியை பெற்றுள்ள அவர், நேற்று பந்து வீச்சு பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இந்தநிலையில் அவர் வெற்றியாளர் கிண்ணத் தொடரில் பங்கேற்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

தொடரை கைப்பற்றியது இந்தியா

இலங்கைக்கு வெற்றியிலக்கு 267 ஓட்டங்கள்

உலக டென்னிஸ் தரவரிசை : நவோமி ஒசாகா 3-வது இடத்துக்கு முன்னேற்றம்