உள்நாடு

வெப்பநிலை குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாட்டின் சில மாவட்டங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை செலுத்த வேண்டிய நிலையை எட்டியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வடக்கு, வடமத்திய, வடமேற்கு, மேற்கு, சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் வெப்பநிலை கவனம் செலுத்த வேண்டிய நிலையை எட்டியுள்ளதாக திணைக்களம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.

வெயிலில் நீண்ட நேரம் வெளிப்படுவதாலும், கடுமையான உடல் செயல்பாடுகளாலும் வெப்ப பக்கவாதம் கூட ஏற்படலாம் என்றும், போதுமான அளவு தண்ணீர் அருந்துவதுடன், பகலில் வெளியில் செல்வதைத் தவிர்த்து, வீட்டுக்குள்ளேயே ஓய்வெடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், முதியவர்கள் மற்றும் நோயாளிகளின் உடல்நிலையை தொடர்ந்து கண்காணிப்பது முக்கியம், மேலும் வெயிலில் வெளிப்படும் வாகனங்களில் குழந்தைகளை தனியாக வைத்திருக்க வேண்டாம் என்றும் வெள்ளை அல்லது வெளிர் நிற லேசான ஆடைகளை அணியவும் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

Related posts

இலங்கைக்கு அமெரிக்கா பாராட்டு

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க எத்தனோலை பயன்படுத்த நடவடிக்கை

அரிசி விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை