வகைப்படுத்தப்படாத

வெனிசூலா எல்லையில் கலவரம்

வெனிசூலா எல்லையில் நிகழ்ந்த கலவரத்தில் 14 வயது சிறுவன் உட்பட 2 பேர் உயிர் இழந்துள்ளதுடன், மேலும் 300-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

வெனிசூலாவில் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், அரசியல் குழப்பமும் தொடர்ந்து நீடிக்கிறது. வெனிசூலாவின் இடைக்கால அதிபராக தன்னை அறிவித்துக்கொண்ட ஜூவான் குவைடோக்கு பல்வேறு நாடுகள் ஆதரவு தெரிவித்ததால், அந்த நாடுகளிடம் இருந்து மனிதாபிமான உதவிகளை பெற அதிபர் நிகோலஸ் மதுரோ மறுக்கிறார்.

உதவி பொருட்களை கொண்டு வரும் வாகனங்கள் வெனிசூலாவுக்குள் நுழையாத படி நாட்டின் எல்லைகளை அவர் மூடி வருகிறார். பிரேசில் மற்றும் கொலம்பியா நாடுகளுடனான எல்லையை இரு தினங்களுக்கு முன்பு மூடியுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

ஆனால் உணவு மற்றும் மருந்து பொருட்கள் கொண்ட உதவி பொருட்களை பெற எல்லையைத் தாண்டும் முயற்சியில் வெனிசூலா மக்கள் ஈடுபட்ட போது பாதுகாப்பு படையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதோடு, ரப்பர் குண்டுகளால் சுட்டனர்.

இதனால் அங்கு கலவரம் வெடித்ததையடுத்து பாதுகாப்புபடையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தெரிகிறது.

இதனால் எல்லையோர நகரங்களில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

Related posts

க. பொ. த. சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் மார்ச் மாதம் வெளியாகும்

US approves Taiwan arms sale despite Chinese ire

ஜப்பான் பிரதமரின் விசேட பிரதிநிதிக்கும் ஜனாதிபதிக்குமிடையில் சந்திப்பு