உலகம்உள்நாடு

வெடுக்குநாறிமலை கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கவனயீர்ப்பு போராட்டம்!

தமிழர்கள் மீது மேற்கொள்ளப்படும் அரச அடக்குமுறைகளுக்கு எதிராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் பல்கலைக்கழக மூன்றலில் கவனயீர்ப்புப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.
19 நண்பகல் 12:00 மணி அளவில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில்,  தமிழர்களுக்கு எதிராக இடம் பெறும் அரச அடக்குமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.
இப் போராட்டத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், ஊழியர் சங்கத்தினர், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Related posts

மேலும் சில கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் முடக்கம்

அகதிகளை வெளியேறுமாறு பாக்கிஸ்தான் அரசாங்கம் உத்தரவு!

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமானது இன்று பாராளுமன்றத்திற்கு அருகில் இரவைக் கழிக்க தீர்மானம்